நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி காந்தல் பகுதியில் குருசடி ஆலயம் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான படகு  இல்லம் அமைந்துள்ளது. ஊட்டி நகரில் இருந்து காந்தல் மார்க்கெட் வரை ஐந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது. இதனிடையே அந்த பகுதியில் சாலை மிகவும் மோசமான இருந்த காரணத்தினால் சாலையை சீரமைக்கும் பணியை நகராட்சி தொடங்கியது. மேலும் மழைநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதன் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டவுன் பஸ்கள் காந்தல் முக்கோணம் வரை இயக்கப்பட்டது. ஆனால் இந்த டவுன் பஸ்  மார்க்கெட் வரை இயக்கப்படாததால் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு உள்ளனர்.  தற்போது பணி முடிவடைந்து நேற்று முதல் ஊட்டி காந்தல் பென்னட் மார்க்கெட் இடையே டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின் இந்த டவுன் பஸ் இயக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.