பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தன. இவை தனது தனிநபர் உரிமைகளை மிகக் கொடூரமாக மீறுவதாகக் கூறி, நடிகை பிரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் தற்போது மிக முக்கியமான அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, நடிகை பிரீத்தி ஜிந்தா குறித்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அனைத்துப் போலி வீடியோக்கள் மற்றும் மார்பிங் புகைப்படங்களை உடனடியாக இணையத்தில் இருந்தும், சமூக வலைதளப் பக்கங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு (Social Media Platforms) நீதிமன்றம் மிகக் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
