ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோர ரயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு வட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணையை தொடங்குகிறார்.

ரயில் விபத்துக்கான காரணம் மின்னணு கோளாறு தானா அல்லது ரயில் நிலைய அதிகாரிகளின் தவறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள இருக்கிறார். இன்று மற்றும் நாளை விசாரணை நடத்தப்பட்டு இதுதொடர்பான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.