திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அம்மாவால் வலுக்கட்டாயமாக வளர்ச்சி ஹார்மோன் மாத்திரைகள் ஊட்டப்பட்ட இளம்பெண்ணை ஆந்திர மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீட்டுள்ளது.

விசாகப்பட்டினம் : சினிமாவில் நடிக்க வைப்பதற்காக 16 வயது மகளுக்கு ஹார்மோன் மாத்திரைகளை தாய் கட்டாயப்படுத்தி கொடுத்த கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்த புகாரை பெற்ற ஆந்திர மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தலையிட்டு குழந்தையை விடுவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக, தாய் தனது மகளுக்கு ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட வற்புறுத்தி வந்தார். மருந்தை உட்கொள்ள மறுத்ததால், தனது தாய் தன்னை அடித்து மிரட்டுவதாகவும் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.. மருந்தின் பக்கவிளைவாக சிறுமியின் உடல் வீங்கியிருந்தது. வலி தாங்க முடியாமல், சிறுமியே சைல்டு ஹெல்ப்லைனுக்கு போன் செய்து புகார் அளித்தார்.

இதையடுத்து குழந்தைகள் உரிமை ஆணைய அதிகாரிகள் வந்து குழந்தையை மீட்டு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். படத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறி தனது தாய் ஹார்மோன் மாத்திரைகளை கொடுத்ததாக சிறுமி  வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக, மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதன் காரணமாக பக்கவிளைவால் ஏற்பட்ட வலி தாங்க முடியாததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலருடன் நெருங்கி பழகும்படி அவரது தாயார் வற்புறுத்தியதாகவும் சிறுமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘அம்மா உடல் வளர்ச்சிக்கு என்று சொல்லி அளவுக்கதிகமாக ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுப்பார். ஆனால் மருந்து சாப்பிட்டால் மயக்கம் வந்துவிடும். உடல் வீங்கும். உடல் முழுவதும் வலியை ஏற்படுத்தியது. அது என் படிப்பையும் பாதித்தது, நான் மாத்திரை சாப்பிட மறுக்கும் போதெல்லாம் அவள் என்னைஅடித்தார். எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விடுவதாக மிரட்டிவந்தார் என 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கூறினார்.

தந்தையை விவாகரத்து செய்த பிறகு, தாயும் மகளும் இடம் பெயர்ந்தனர். பின்னர் அவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார், ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது கணவர் இறந்துவிட்டார். சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு குழந்தை உரிமை ஆணையம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.