தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கங்கணங்கிணறு ஊரில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வினோத் குமார் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு டூ வீலர் மெக்கானிக் கடையில் தின கூலியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் தோட்டத்தில் பூச்செடிகளை பயிரிட்டு இருந்தார். அவரது மோட்டார் பம்ப்செட்க்கு மின்கம்பத்தில் இருந்து வரும் மின் ஒயர் அறுந்து கிடந்ததால் 10 நாட்களாக மின் வினியோகம் இல்லை. இது தொடர்பாக மின்வாரிய அலுவலரிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கிருஷ்ணனுக்கு உதவி செய்வதற்காக வினோத்குமார் மின்கம்பத்தில் ஏறி மின்தடையை சரி செய்ய முயன்றார். அவர் டிரான்ஸ்பார்மடை சரியாக ஆப் செய்யாமல் விட்டதால் பழுது பார்க்கும் என்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று வினோத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.