சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 39 வது லிக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இதில் சென்னை அணி இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது.

இதேபோன்று லக்னோ அணியும் 4 வெற்றி 3 தோல்வியென 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்நிலையில் கடந்த போட்டியில் சென்னை அணி லக்னோவுடன் மோதிய நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் இதனால் இன்று நடைபெறும் போட்டியில் லக்னாவுக்கு சென்னை பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.