ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணத்தை தொடங்குகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..

கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் நடை பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.