மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிஎப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்காக வரி விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் இணைக்கப்பட்ட பிஎஃப் கணக்குகளுக்கு டிடிஎஸ் வரி விதிக்கப்படாது.

மேலும் பிஎப் கணக்குடன் பான் கார்டுகளை இணைக்காத போது பணம் எடுக்கையில் விதிக்கப்படும் டிடிஎஸ் வரிகளில் 10 சதவீதம் குறைப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பான் கார்டு இணைக்காத கணக்குகளுக்கு 30 சதவீதம் டிடிஎஸ் வரி விதிக்கப்பட்ட வந்த நிலையில் இந்த புதிய விதிமுறை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது .