சொந்தமாக வளர்த்த ஒரு செல்லப் பிராணியை, பெத்த பிள்ளை போலப் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பெண்ணே, தன் காரில் கூட்டிவந்து நடுரோட்டில் அநியாயமாகக் கீழே இறக்கிவிட்டுத் தவிக்கவிட்டுச் சென்ற ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வாயில்லா ஜீவனான நாய், தன்னைத்தான் தன் முதலாளி விட்டுச் செல்கிறார் என்று கூடத் தெரியாமல், அந்த காரின் பின்னாடியே ரொம்பத் தூரம் பாசத்தோடு ஓடி ஓடித் துரத்தியுள்ளது. ஆனால், அந்தப் பெண் ஒரு நிமிடம் கூடத் தன் காரை நிறுத்தாமல், அந்தப் பாசக்கார ஜீவனை நடுரோட்டிலேயே அனாதையாகத் தவிக்கவிட்டுவிட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
एक महिला अपनी कार में एक पालतू कुत्ते को लेकर आई और उसे बीच सड़क पर छोड़कर चली गई।
बेचारा कुत्ता काफी दूर तक कार के पीछे-पीछे भागता रहा, लेकिन महिला ने एक बार भी गाड़ी नहीं रोकी और उसे वहीं छोड़कर चली गई,
अब यह वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। वीडियो देखकर कई लोग… pic.twitter.com/VtJxnaKdrd
— Srishti Vishwakarma (@Srishtivishwak4) July 12, 2026
நெஞ்சை உலுக்கும் இந்த ஒட்டுமொத்தக் காட்சியும் தற்போது வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் பயங்கர வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இந்தத் துரோக வீடியோவைப் பார்த்த ஒட்டுமொத்த இணையவாசிகளும் அந்தப் பெண்ணின் இரக்கமற்ற, அநாகரிகச் செயலைக் கண்டு பயங்கர கோபமடைந்து, அவரை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துத் தங்களது கண்டனங்களைக் குவித்து வருகின்றனர். “கடைசியில் இப்படி நடுரோட்டில் அனாதையாகத் தவிக்கவிட்டுப் போவதற்கு, ஆசை ஆசையாக அதை ஏன் வீட்டில் வளர்க்க வேண்டும்?” என்று பலரும் தங்களது ஆதங்கத்தையும், எமோஷனலான இரங்கல்களையும் சோசியல் மீடியாவில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
