தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படும் நிலையில், ஏகே 62 குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஒன்றாக நடித்துள்ளனர். மேலும் ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.