பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது சமீபத்தில் கிடைத்தது. இந்நிலையில் டைட்டானிக், அவதார், அவதார் 2 போன்ற பிரபலமான படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் அமெரிக்காவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்துள்ளார்.

இந்த படம் ஜேம்ஸ் கேமரூனுக்கு மிகவும் பிடித்ததால் அவருடைய மனைவி சுசுக்கு பரிந்துரை செய்து மீண்டும் ஒருமுறை ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் ராஜமவுலி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு படம் மிகவும் பிடித்ததால் அவருடைய மனைவிக்கு பரிந்துரை செய்து மீண்டும் ஒருமுறை படத்தை பார்த்துள்ளார். படம் குறித்து நீங்கள் 10 நிமிடம் என்னிடம் பேசியதை என்னால் நம்ப முடியவில்லை. மேலும் நீங்கள் சொன்னது போல் நான் உலகத்தின் உச்சியில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.