தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, அவைக்குள் வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு மற்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய வேளையிலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருக்கையிலேயே அமர்ந்திருந்தது பெரும் விவாதத்தையும் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ரீதியாக எத்தகைய கடுமையான விமர்சனங்களையும் மாற்றுக்கருத்துகளையும் முன்வைக்க உரிமை இருந்தாலும், தமிழக முதலமைச்சர் பதவி வகிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பதவிக்கும், அந்தப் பீடத்திற்கும் தரப்பட வேண்டிய அடிப்படை மரியாதையைக் குறைக்கக் கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.

முதலமைச்சர் பதவி என்பது எந்தவொரு குடும்பத்திற்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானதல்ல என்றும், அது தமிழக மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின் மூலம் உருவான அரசியலமைப்புப் பொறுப்பு என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மூத்த தலைவர்களின் நீண்ட அரசியல் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைச் சட்டமன்ற நாகரிகத்தை எதிர்க்கட்சித் தலைவர் பின்பற்றத் தவறியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் இடமாகச் சட்டமன்றத்தை மாற்றுவது சரியல்ல என்றும், ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில் தலைவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் பதிவாகியுள்ளன.

“>

 

அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்றாலும், சட்டப்பேரவையின் மாண்பையும் சபையின் கண்ணியத்தையும் குறைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும், மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன.