தெற்கு ரயில்வே நிர்வாகம் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்நிலையில் எர்ணாகுளத்தில் இருந்து பிப்ரவரி 4,11,18,25 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை தோறும் மதியம் 1.10 மணிக்கு ரயில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மேலும் மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6:40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை 11:40 மணியளவில் எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில்களில் பயண சீட்டு முன்பதிவு ஜனவரி 20-ஆம் தேதி காலை 8 மணி முதல் தேதி தொடங்குகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.