தமிழகத்தின் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் தன் மனைவியை தாக்கி அரை நிர்வாணப்படுத்தியதாக ராணுவ வீரர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் 120 ஆண்கள் அவரது மனைவியை தாக்கியதாகவும், அரை நிர்வாணமாக்கி அடித்ததாகவும் ராணுவ வீரர் பிரபாகரன் என்பவர் அந்த வீடியோவில் கூறினார்.

இதனிடையே திருவண்ணாமலை காவல்துறையினர் குற்றச்சாட்டை நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. அந்த வீடியோவில் கூறப்பட்ட கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டவை எனவும் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.