கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்பட்டு, பின்னர் கோடை வெயில் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே இன்று 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன.

இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில், உபுதிய கல்வி ஆண்டில் வகுப்புக்கு வராத மாணவர்களை லிஸ்ட் எடுத்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவர வைப்பது தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே மாணவர்கள் இன்றுமுதல் பள்ளிக்கு வரவில்லை என்றால் நடவடிக்கை அவர்களை தேடி வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.