நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அஜித்குமார் தனது பிள்ளைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராதா கதவை அடைத்து உள்ளே சென்று எண்ணெயை கொதிக்க வைத்துள்ளார்.
அதன் பிறகு தனது கணவர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அஜித் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.