சென்னையில் உள்ள அமைந்தகரையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கௌதம் என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இதே மருத்துவமனையில் 26 வயது பெண் ஒருவர் நர்சாக வேலை பார்க்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த நர்ஸ் மீது  கௌதமுக்கு ஆசை வந்துள்ளது. இதனால் அவரை காதலிப்பதாக கூறிய கௌதம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த நர்ஸ் கர்ப்பமான நிலையில் கருக்கலைப்பும் செய்துள்ளார்.

அதன் பிறகு அந்த நர்ஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் அவர் உன்னை என் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று பலமுறை ஆசை வார்த்தை கூறியதோடு திருமணம் செய்து கொள்ளாமல் தட்டி கழித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த நர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கௌதமை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.