ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா, 100 தினங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கடந்த டிச,.24 ஆம் தேதி டெல்லியில் இந்த யாத்ராவில், திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து ராகுலுடன் கமல் மேற்கொண்ட உரையாடல், யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் கமல்ஹாசன் “ஹே ராம்(Hey Ram)” படம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “நான் தற்போது காந்தியை பற்றி அதிகம் பேசுகிறேன். எனது தந்தை ஒரு காங்கிரஸ்காரர் ஆவார். நான் எனது பதின் பருவத்தில் இருந்தபோது என் சூழல் காந்தியை கடுமையாக விமர்சிக்க வைத்தது. என் அப்பாவிடம் (மகாத்மா காந்தி) மன்னிப்பு கேட்கவே இந்த படத்தை நான் எடுத்தேன்” என கமல், ராகுலிடம் தெரிவித்துள்ளார்.