மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்ணா மாவட்டத்தில் அஜய்கர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் சுஷில் குமார் சுக்லா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் தன்னுடைய மகளின் பிறந்தநாளை முன்னிட்டு உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் வந்த போலீஸ்காரர்கள் அவரை வழிமறித்துள்ளனர்.

அவரை திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு சிறிது நேரம் காவலில் வைத்திருந்தனர். பின்னர் ஹெல்மெட் போடவில்லை என கூறி 300 ரூபாய் அபராதம் விதித்து பணம் வாங்கிவிட்டு அங்கிருந்து அனுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட எஸ்பியிடம் அவர் புகார் கொடுத்த நிலையில் தற்போது விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்