மராட்டிய மாநிலத்தில் அஞ்சலி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்காக  தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இவர் 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 21ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அஞ்சலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது காவல் துறைனரின் கையில் சிக்கியது. அதில் அவர் எழுதி இருந்ததாவது, எனது அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட மனவேதனையில் இருந்து என்னால் விடுபட முடியவில்லை. அரசு தேர்வுகள் மற்றும் அரசு பணியில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏராளமான இளைஞர்கள் இதை நம்பி தான் உள்ளார்கள். இதில் தேர்ச்சி பெற பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்துகின்றனர். ஆனால் அவ்வளவு தொகையை மாணவர்களால் கொடுக்க முடியாது. மேலும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களை கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.