தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் நடிப்பை ஒரே சீரியல் காட்டி அத்தனை இல்லத்தரசிகளையும் ஒரு கட்டுக்குள் இழுத்துவிட்டார். இவர் நடிகை மட்டுமல்லாமல் டான்ஸராகவும் இருக்கிறார். பிரபல தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திகை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவர் சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இனியா சீரியலில் வைக்கப்பட்டுள்ள திருமண காட்சிகளுக்காக மணப்பெண் போன்று அலங்காரம் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க