நடிகர் ஜெகன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிபவர்.ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு நல்ல அறிமுகம் தந்த படம் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிட்டி பாபு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நண்டு சிண்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதால் நண்டு ஜெகன் என்று அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை உ வெளியிட்டுள்ளார். அதில் தனது தாயார் கடும் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எங்களை ஈன்றபோது எத்தனை இரவுகள் இப்படிதானே கவலை தோய்ந்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய். உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன் என்று கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.