கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதன் டீசர் வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. அப்போது இந்த படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற டைரக்டர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் உருவாகிய இந்த படம் பற்றி கூறி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்துள்ளது. படம் ரிலீஸ் ஆனாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக இருக்கிறது. இது அப்படியே ரீமேக் இல்லை. 90 சதவீதம் வேறொரு படமாக கொடுத்திருக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.