தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்பதால்  இன்று வெளியே செல்ல வேண்டாம்11AM – 3PM வரை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூரில் வெப்பநிலை 41-42 c ஆக இருக்கும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே செல்ல வேண்டாம் என்றும் ஞாயிற்றுக்கிழமை வரை வெயில் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசோகரிகம் ஏற்படலாம் எனவும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.