ராஜஸ்தான் பர்மீர் என்ற மாவட்டத்தில் ஷகூர் கான் மற்றும் ரஹ்மத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மரியன் என்ற மகளும் யாசின் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஷகூர் ஆணின் பெற்றோர்கள் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடும்பத்திற்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்துவரும் நிலையில் இந்த பொருட்களை தனது தாயாரிடம் கொடுக்கும்படி மனைவியிடம் ஷகூர் கான் உள்ளார். ஆனால் ரேஷன் பொருட்களை மாமியார் மற்றும் மாமனார் வீட்டிற்கு கொடுக்க ரஹ்மத் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாமியாருக்கு ரேஷன் பொருட்களை கொடுக்க கணவர் தன்னிடம் சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த மனைவி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். நேற்று இரவு தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டிக்கு சென்று அதற்குள் தனது இரண்டு குழந்தைகளையும் வீசிய அவர் தானும் அதற்குள் குதித்துள்ளார். பிறகு மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.