கனடா நாட்டில் கியூபெக் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ரோஸ்ஹம் ரோடு என்ற பகுதி வழியாக ஏராளமான அகதிகள் கனடாவுக்குள் நுழைகின்றனர். இவ்வாறு நுழையும் அகதிகளுக்கு தேவையான வசதிகளை அந்த மாகாணத்தின் பிரீமியரான Francois legault என்பவர் தலைமையிலான அரசு செய்து வருகின்றது. இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் கியூபெக் மாகாணத்திற்குள் நுழைவதால் அம்மாகாணத்தின் பிரீமியர் இனி தங்களால் அகதிகளுக்கு தேவையான வசதிகளை வழங்க முடியாது என கூறியுள்ளார்.
அதோடு அவர் அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூட்டோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது “ரோஸ்ஹம் ரோடு வழியாக கியூபெக் மாகாணத்திற்குள் நுழையும் அகதிகள் அந்த எல்லையை அடைந்ததும் உடனடியாக வேறு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கியூபெக் மாகாணத்தில் அகதிகள் அதிக அளவில் உள்ளனர். இனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம். அதோடு ரோஸ்ஹம் ரோடு ஒரு நாள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.