கர்நாடக மாநிலத்தில் மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன
. இந்நிலையில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் நாளான மே 10-ம் தேதி வாக்களிப்பதற்காக கோவா அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவித்துள்ளது.அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது விடுமுறை விடுவது வழக்கம் தான் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு கோவா தேர்தலின் போது கர்நாடகாவிலும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.