கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது. இந்நிலையில், கோவாவில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் இன்றுஊதியத்துட கூடிய விடுமுறை என கோவா அரசு அறிவித்துள்ளது.

மேலும், இதில் தனியார் நிறுவனங்களுக்கும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கோவா மாநில தொழில்துறை சங்கத் தலைவர் தாமோதர் கோச்சர், இது மாநில அரசின் அபத்தமான முடிவு என கூறியுள்ளார்