ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாக தகவல்கள் பரவுகிறது.

வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை மட்டும் வைத்து வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு தற்போது UIDAI விளக்கமளித்துள்ளது. அதில், ‘ஆதார் எண்ணை வைத்து யாராலும் வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுக்க முடியாது. OTPஐ பாதுகாப்பாக வைத்திருங்கள். ஆதார் மூலம் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை’ என விளக்கியுள்ளது.