பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் அதில் துரானி என்பவரை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் ராக்கி சாவந்த் தன் கணவர் தன்னை துன்புறுத்துவதாகவும் வீட்டில் உள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டதாகவும் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்திருந்தார். அதோடு தன்னை நிர்வாணமாக படம் பிடித்து அதை சிலருக்கு விற்று விட்டதாகவும் ராக்கி சாவந்த் கணவர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதனால் அதில் துரானியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மைசூரில் உள்ள விவிபுரம் காவல் நிலையத்தில் ராக்கி சாவந்தின் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் நான் மைசூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் தங்கி மருத்துவம் நான் படித்து வருகிறேன். நானும் அதில் துரானியும் காதலித்து வந்த நிலையில் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி என்னுடன் உல்லாசம் அனுபவித்தார். ஆனால் தற்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிப்பதோடு உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியில் காண்பித்து விடுவேன் என்றும் மிரட்டவும் செய்கிறார் என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கற்பழிப்பு மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ராக்கி சாவந்த் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.