விக்ரம் திரைப்படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தன் 234-வது படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் வெளியாகிய “நாயகன்” படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து 35 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டுமாக இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வரும் 2024 ஆம் வருடம் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடிகை திரிஷாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் போன்ற படங்களில் திரிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.