கடலூர் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருள்வார். இந்த திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ம் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் நிலையில் அதிகாலை 2 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியுள்ளது. இந்த விழாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.