
சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக சக்திகள் பிரிந்து கிடக்கும் நிலையில் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது குரலாக இருக்க வேண்டும். இனிவரும் தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிட்டால் கண்டிப்பாக நம்மை யாராலும் வெல்ல முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் உலகத்தில் எங்கும் இல்லாத கூத்தாக எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்றாக இணைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து முதல்வர் ஹலோ ஹலோ சுகமா என்று கேட்கிறார். அதற்கு இவர் ஆம் நீங்கள் நலமா என்று கேட்கிறார். இப்படித்தான் தமிழக சட்டசபை போய்க்கொண்டிருக்கிறது. மேலும் பிரிந்து கிடக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணைக்க கூடாது என்று கூறுவது எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் என்று கூறினார்