கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அஜய் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணும் அஜயை காதலித்தார். இந்நிலையில் அஜய் அந்த இளம்பெண்ணுடன்  திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இளம் பெண் அஜயை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்படவே கோபத்தில் அஜய் இளம் பெண்ணை தீர்த்தக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி தன் காதலியை தனியாக பேச அஜய் அழைத்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் காதலியை வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து வாலிபர் தப்பி ஓடிவிட்டார். அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.