
பொதுவாக திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், குறிப்பாக நெருக்கமான தோழிகளுக்கு அழைத்து வரவேற்பது ஒரு வழக்கமாகவே உள்ளது. ஆனால் சமீபத்தில் ஒரு மணப்பெண் தனது நீண்டநாள் தோழிக்கு மணப்பெண் துணையாக (bridesmaid) வருமாறு அழைப்பு விடுத்தபோது எதிர்பாராத பதிலை சந்தித்துள்ளார். அதாவது அந்த தோழி, “நான் மணப்பெண் துணையாக வர தயார், ஆனால் உடை, சிகை அலங்காரம், பரிசு, விருந்துக்கான செலவுகள் உள்ளிட்டவை அனைத்தும் சேர்த்து ரூ.70,000 செலவாகும். எனவே அந்த தொகையை எனக்கு வழங்கினால் மட்டுமே கல்யாணத்தில் பங்கேற்பேன்” என மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார்.
இதைக் கேட்ட மணப்பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தனது நிதி நிலைமை இதற்குரியதாக இல்லையென்று தோழியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் மாறாமல் இருந்ததாக தனது சமூக வலைதளத்தில் அந்த பெண் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு வைரலாகி, திருமண செலவுகள் மற்றும் நண்பர்கள் இடையிலான நிதி நெருக்கடி பற்றிய விவாதங்களை இணையத்தில் உருவாக்கியுள்ளது. நெட்டிசன்கள் இதைப் பற்றி பரபரப்பான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் தோழியின் கோரிக்கையை நியாயப்படுத்தியும், பலர் அதைப் பெரிதும் விமர்சித்தும் வருகின்றனர்.