நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் நாங்கள் வாழ்த்தி வரவேற்போம். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் இருக்கிறது. என்னுடைய தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
திருமாவளவன் தலித்துகள் முதலமைச்சர் ஆக முடியாது என்று கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் அதே சமயம் திமுக மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிய அவருடைய கருத்தை நான் மறுக்கிறேன். அதன் பிறகு விஜய் மாநாடு நடத்துவதற்காக இடங்களை தேர்வு செய்யும் நிலையில் அதன் உரிமையாளர்களை மிரட்டுவது தான் ஜனநாயகமா.? இதனை சர்வாதிகாரம் என்று கூட சொல்ல முடியாது. கொடுங்கோன்மை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டது கொடுஞ்செயல். இது கேவலமான மற்றும் அசிங்கமான அரசியல் பழிவாங்கல் என்று கூறினார்.