ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பும், இறுதியிலும் தேசியகீதம் இசைக்க வேண்டுமென பலமுறை கேட்டுக்கொண்டும் அறிவுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். அரசு வழங்கிய உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாக குறிப்பிட்டு, உரையை வெறும் 4 நிமிடங்களில் முடித்துக் கொண்டார். உரையில் இடம்பெற்றுள்ள பல வாசகங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் பேரவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்த வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால், முழுமையாக வாசிக்க விரும்பவில்லை எனக்கூறி நிறைவு செய்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக்குறிப்பிட்டு உரை முடித்துக் கொண்டு, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் ஆளுநர் அமர்ந்துள்ளார்.