ஹைதராபாத்தில் லிட்டில் ஃப்ளவர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பள்ளி தலைமை ஆசிரியர் உறுதிப்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட மாணவனை பள்ளியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட மாணவன் ஆகியோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவத்திற்கு ஏஐஎஸ்எஃப் போன்ற மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து பள்ளி முன்பாக போராட்டம் நடத்தியதோடு பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சம்பவத்தை அதிகாரிகள் மறைக்க முயற்சித்ததாக புகார் எழுந்த நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் தீவிரமடைந்ததால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதேபோன்று ஹைதராபாத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சிவகுமார் என்ற வாலிபர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.