இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் இன்று அனைத்துமே ஆன்லைன் மயமாகி விட்டது. இன்னும் சொல்லப்போனால் சிறிய பொருட்களை கூட இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலம் வாங்கி விடுகிறோம். அப்படி ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் பலரும் கூகுள் பே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் கூகுள் பே பயன்படுத்துவோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று எதிர் முனைக்கு பணம் செல்லாத போதும் வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாகும். பொதுவாக அந்த பணம் 3 முதல் 4 நாட்களுக்குள் திரும்பி செலுத்தப்படும். அப்படி கிடைக்கவில்லை என்றால் 1-800-419-0157 என்ற எண்ணுக்கு போன் செய்தும், ‘Google pay Help center’ என்ற பக்கத்தில் புகாரை பதிவு செய்தும் உங்களுடைய பணத்தை திரும்ப கோரலாம்.