இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆனால் சிலர் முகவரி மற்றும் புகைப்படத்தை மாற்றாமல் வைத்திருப்பார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் புகைப்படத்தை எளிதில் மாற்றி விடலாம்.

உங்களுடைய ஆதாரில் ஏதாவது சமீபத்தில் புதுப்பித்து இருந்தால் இதை இலவசமாக செய்ய முடியாது. அதனைப் போலவே ஆதார் அட்டையை 10 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தால் நீங்கள் கட்டாயம் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற வேண்டும். உங்கள் முகவரி மற்றும் தோற்றம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் என்பதால் அதனை புதுப்பிப்பது அவசியம். தற்போது ஆதாரை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் உடனே இந்த வேலையை முடித்து விடுங்கள்.