இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வு ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது 50 சதவீத அகவிலை படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்.

ஆனால் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான மூன்று மாத நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலையில் இந்த தொகையானது வரும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அடிப்படை சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட சம்பளத்தை பலனாக பெறுவார்கள் என கூறப்படுகிறது.