காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. ஆனால் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கார்டு மூலமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேமிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருதி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது வாடிக்கையாளரின் தகவல்களை சேமிக்க முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக குறிப்பிட்ட தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விதிகள் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதியின் படி வாடிக்கையாளரின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு குறித்த தகவல்கள் கார்டு வழங்கும் நபர் மற்றும் கார்டு நெட்வொர்க் ஆகியவற்றிற்கு மட்டுமே தெரிவிக்கப்படும். இந்த விதி அமல்படுத்துவது குறித்து ஆலோசனை தற்போது நடந்து வரும் நிலையில் இதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டு பரிசீலனைக்கு பிறகு அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.