பொதுவாக வங்கிகளில் வழங்கப்படும் லோன்கள் வாங்குவதில் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் அதிக அளவிலான தீமைகளும் உள்ளது. அதாவது வங்கியில் வழங்கப்படும் கடனை சரியாக திரும்பச் செலுத்தினால் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் அப்படி சரியாக செலுத்தவில்லை என்றால் உங்களது சிபில் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோர் அப்படியே குறைந்து விடும். அதேசமயம் நீங்கள் கூட்டுக் கடன் கணக்கை வைத்திருந்தால் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதாவது நீங்கள் கூட்டுக் கடன் கணக்கு வைத்திருந்தால் கடன் வாங்கிய நபர் கடனை சரியான நேரத்திற்கு திருப்பி செலுத்தினால் பிரச்சனை வராது. உங்களுடைய சிபில் ஸ்கோர் மட்டுமல்லாமல் கடன் வாங்காத வரையும் கிரெடிட் ஸ்கோர் உயரும். ஆனால் கடனை செலுத்தாமல் விட்டால் கடன் வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோர் அப்படியே குறைந்து விடும். அதுமட்டுமல்லாமல் அந்த கடனை நீங்கள் தான் செலுத்த வேண்டும். எனவே கூட்டு கடன் கணக்கு தொடங்குவதற்கு முன் இதெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.