இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று இருக்கும். இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு வருடத்தின் கால் பகுதியை குறிக்கின்றது.

உங்களுடைய சிலிண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள A என்ற எழுத்து ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களையும், B என்ற எழுத்து ஏப்ரல், மே, ஜூன் ஆகிய  மாதங்களையும், C என்ற எழுத்து ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களையும், D என்ற எழுத்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களையும் குறிக்கின்றது. இந்த காலகட்டத்திற்கு பிறகு அதை மாற்ற வேண்டும் என்பதை நீங்கள்  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.