உங்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கணக்கு இருக்கா?…. அப்போ இனி இது கட்டாயம்?…. வெளியான உத்தரவு….!!!!

இந்திய அஞ்சல் துறையானது மக்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கான வட்டி விகிதமும் இப்போது உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அஞ்சலகம் சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்குரிய KYC விபரங்களை தபால்துறை மாற்றியமைத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல் 10 லட்சத்திற்கு மேல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் KYC விபரத்துடன் வருமான சான்றிதழை வழங்கவேண்டும்.

அதன்படி முதலீட்டாளர் வருவாய் ஈட்டியதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பண மோசடிகளை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் சிறு சேமிப்பு திட்டங்களில் சேர ஆதார் மற்றும் பான் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது வருமான வரி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.