காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  இன்று 75 வயதில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மிகப்பெரிய அரசியல் பாராம்பரியத்தை கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவருமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும் தற்போதைய ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நல குறைவினால் காலமான செய்தியை கேட்டு நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். மேலும் அவரைப் பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சினருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.