குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிவப்பிரசாந்த் போட்டி இல்லை என தெரிவித்துள்ளார்.
குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். பொதுத் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கிய ஆணையம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒதுக்க இயலாது எனக் கூறியதால் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றோடு நிறைவடைந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக வேட்பாளர் இன்று தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சி, அமமுக என தேர்தல் களத்தில் இருந்த நிலையில், திடீர் திருப்பமாக அமமுக தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.