தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய குறிப்பு, கல்வி சான்றிதழ்,ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு மாவட்டம் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெருந்துறை ரோட்டில் நடைபெற உள்ளது.