திருவாரூர் மாவட்டத்தில் கணவன் உயிரிழந்த சில மணி நேரத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மும்தாஜிற்கு மருந்து வாங்க கடைக்கு சென்று உள்ளார்.

இந்நிலையில் அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட நான்கு மணி நேரத்திலேயே அவரின் மனைவி மும்தாஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மும்தாஜ்க்கு வயிற்றில் கட்டி இருந்ததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் உறவு பலரையும் நெகிழ வைத்துள்ளது.