டெல்லியில் காங்காராம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கே புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வாலிபரின் விந்தணுக்களை அவர்களின் பெற்றோர் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தங்களுடைய மகன் இறந்துவிட்டதால் அவருடைய விந்தணு மூலம் வாடகை தாய்முறையில் குழந்தையை பெற்றுக்கொள்ள பெற்றோர் விரும்புகிறார்கள். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது விந்தணுவை கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இறந்தவரும் தந்தை ஆகலாம் என்று நெகிழ்ச்சி உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. அதாவது இறந்தவர்களின் உயிரணுக்கள் மூலம் வாடகை தாய்முறையில் செயற்கையாக குழந்தை பெறுவதில் தவறு கிடையாது. எனவே பாதுகாக்கப்பட்ட வாலிபரின் விந்தணுவை பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தங்கள் மகன் இறந்தாலும் அவருடைய வாரிசையாவது வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பிய நிலையில் கோர்ட்டின் இந்த உத்தரவு அவர்களுக்கு நிம்மதியை தரும் விதத்தில் அமைந்துள்ளது.